Posts

Showing posts from March, 2022

Shodasa Lakshmi lyrics - ஷோடச லட்சுமி துதி

திருவிளக்கின் முன் நின்று மகாலட்சுமியைப் போற்றும் ஷோடச லட்சுமி துதியைச் சொன்னால் போதும்.விளக்கின் சுடரில் திருமகள் இடம்பிடித்துவிடுவாள் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் திரு முன்பு தீபத்தினை ஏற்றிவைத்து இந்தத் துதியை மனம் ஒன்றிச் சொல்லுங்கள். மகாலட்சுமியின் பரிபூரணமான கடாட்சம் உங்களுக்குக் கிட்டும். ஆதிலட்சுமி நமஸ்தேஸ்து பரப்ரஹ்ம ஸ்வரூபிணீI யசோதேஹி தனம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமேII பரபிரம்ம சொரூபிணியான ஆதிலட்சுமியே உனக்கு நமஸ்காரம். புகழைக் கொடு. தனத்தைக் கொடு. அனைத்து அத்தியாவசிய விருப்பங்களையும் அளிப்பாயாக. சந்தானலக்ஷ்மி நமஸ்தேஸ்து புத்ரபௌத்ர ப்ரதாயினீI புத்ரான்தேஹி தனம் தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமேII சந்ததி சிறந்திட சந்தான பாக்யம் அளித்திடும் சந்தான லட்சுமியே வணக்கம். எனக்கும் அந்தப் பேறினைக் கொடு. செல்வத்தைக் கொடு. நியாயமான எல்லா தேவைகளையும் நிறைவேற்று. வித்யாலக்ஷ்மி நமஸ்தேஸ்து ப்ரஹ்ம வித்யா ஸ்வரூபிணீI வித்யாம்தேஹி கலாம்தேஹி சர்வகாமாம்ஸ்ச தேஹிமேII பிரம்ம வித்யா தேவியின் வடிவினளான வித்யா லட்சுமியே உனக்கு நமஸ்காரம். வித்யையைக்கொடு. கலைகளைக் கொடு. எல்லா நல் இஷ்டங்களையும் நிறைவேற்...